வசந்த விழா கலைநிகழ்ச்சியின் பார்வைகள் எண்ணிக்கை புதிய உச்சம்
2023-01-22 16:21:23

ஜனவரி 22ஆம் நாள் அதிகாலை 2 மணி வரை, பல்வேறு ஊடகங்களிலும் 2023ஆம் ஆண்டுக்கான வசந்த விழா கலை நிகழ்ச்சியின் மொத்த பார்வைகள் எண்ணிக்கை 1101 கோடியைத் தாண்டியது. இதில் 15 முதல் 44 வயது வரையான பார்வையாளர்களின் எண்ணிக்கை  50.51 விழுக்காடு பங்கு வகிக்கிறது. புதிய ஊடகங்களில் நேரலை அளவும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு அளவும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய உச்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. புதுமையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சீன  ஊடகக் குழுமம் தயாரித்த இந்த வசந்த விழா கலை நிகழ்ச்சி, உலகளாவிய சீனர்களுக்கு பண்பாட்டு விருந்தாக அமைந்தது.