சீனப் புத்தாண்டுக்கான பன்னாட்டு தலைவர்களின் வாழ்த்து
2023-01-22 17:36:50

பல சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பன்னாட்டு அரசியல்  தலைவர்கள் சீன மக்கள் மற்றும் உலகளவிலுள்ள சீனர்களுக்குச் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் ஜோர்ஜிவா சீன மக்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்திலுள்ள சீனாவைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். முயல் ஆண்டில் அனைவரும் நல்ல ஆரோக்கியமாகவும் இன்பமாகவும் வாழ வாழ்த்துகிறேன் என்று புதிய ஆண்டின் வருகையுடன் உலகமும் ஒன்றிணைந்து முன்னேறுவதை எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

சர்வதேச வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலா அனைத்து சீன மக்களுக்கும் முயல் ஆண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே போல, முயல் ஆண்டில் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துவதாக கனடா தலைமை அமைச்சர் ட்ரூடோ கூறினார்.