பலதரப்பு வாதத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்: ஆல்பர்டோ பெர்னாண்டஸ்
2023-01-22 18:44:10

பலதரப்பு வாதத்தை மதிப்பது என்பது, சீனா முன்வைத்த மதிப்புமிக்க கருத்து ஆகும் . பலதரப்பு வாதத்திற்கு கூட்டாக ஆதரவு அளிக்கிறோம் என்று அர்ஜென்டினா அரசுத் தலைவர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

தென் அமெரிக்க கண்டம், ஒரு பிராந்தியமாகவே உலகத்துடன் உரையாடல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நமது பிராந்தியத்தில் தானியம் மற்றும் எரிசக்தி உற்பத்தி போன்ற சாதகங்களை கொண்டுள்ளோம். உலக விவகாரங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்கும்போது, சாதகமான இடத்தைப் பிடிக்கிறோம். பனிப்போர்  காலத்தில் ஏற்பட்ட எதிரெதிர் நிலை போன்ற  பகைமையை எப்போதும் எதிர்த்துள்ளேன். மேலாதிக்கத்தை எதிர்க்கிறேன். உலகளவில் மேலாதிக்கம் செலுத்தும் நாடு இருக்கக் கூடாதே என்று விரும்புகிறேன். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு,  பலதரப்பு வாதத்தை மேம்படுத்துவதாக அமையும். இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். எடுத்துக்காட்டாக, தொற்று நோய், உலகப் பொருளாதார வளர்ச்சியின் சமமின்மையை வெளிக்காட்டுகிறது. கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்கப்பட்ட தொடக்கக் கட்டத்தில், உலகின் 90 சதவீத தடுப்பூசிகள், உலகின் 10 சதவீத மக்கள் தொகைக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டன. இது, உலக அமைப்பமுறையின் நியாயமற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது.  உலகப் பொருளாதார அமைப்புமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம். ஏனென்றால், அதில் நியாயமின்மை நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.