15 நாட்களில் 11கோடி தொடர்வண்டிப் பயணங்கள்
2023-01-23 17:46:17

சீனாவில் வசந்த விழாவுக்கான போக்குவரத்து இயக்கத்தின் முதல் 15 நாட்களான ஜனவரி 7 முதல் 21ஆம் நாள் வரை சீனா முழுவதும் சுமார் 11கோடி பயணிகள் தொடர்வண்டி மூலம் பயணம் செய்துள்ளனர். இது, 2022ஆம் ஆண்டை விட 27.3 விழுக்காடு அதிகம். அதன்படி நாள்தோறும் சராசரியாக  73லட்சம் தொடர்வண்டிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.