கூட்டு நாணயம் வெளியிட அர்ஜென்டீனாவும் பிரேசிலும் முடிவு
2023-01-23 16:26:45

அர்ஜென்டீனாவும் பிரேசிலும் கூட்டு நாணயம் வெளியிடுவது பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக அந்நாடுகளின் அரசுத் தலைவர்கள் 22ஆம் நாள் உறுதி செய்தனர்.

நிதி, வணிகம் உள்ளிட்ட துறைகளின் பரிமாற்றத்தை அதிகரித்து செலவைக் குறைத்து வெளிப்புற பாதிப்புகளைச் சமாளிக்கும் திறனை உயர்த்தும் வகையில், தென் அமெரிக்க கண்டத்தின் கூட்டு நாணயம் பற்றிய விவாதத்தை முன்னேற்ற இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.