பாலி தீவில் சீனப் பயணிகளுக்கு வரவேற்பு விழா
2023-01-23 16:55:58

2023ஆம் ஆண்டு தனி விமானத்தில் சீனாவின் ஷென்சென் மாநகரில் இருந்து பாலிதீவுக்கு வந்துள்ள முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழுவுக்கு இந்தோனேசிய சுற்றுலா அமைச்சகமும் பாலிதீவு மாநில அரசும் 22ஆம் நாள் வரவேற்பு விழா நடத்தின.

பாலி மாநில ஆளுநர் கோஸ்டர் வரவேற்பு விழாவில் உரை நிகழ்த்துகையில்,  சீனச் சந்தைத்துக்கு இந்தோனேசியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பல ஆண்டுகளாக, பாலி தீவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சீனர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக இருந்த போது, பாலி தீவுக்கு வருகை தந்த சீனப் பயணிகளின் எண்ணிக்கை 14இலட்சத்தை  தொட்டது என்று தெரிவித்தார்.