சீனப் புத்தாண்டுக்குப் பன்னாட்டு தலைவர்கள் வாழ்த்து
2023-01-23 17:03:35

பல சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும், பன்னாட்டு அரசியல் தலைவர்களும் சீன மக்கள் மற்றும் உலகளவிலுள்ள சீனர்களுக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மலேசிய தலைமை அமைச்சர் அன்வர் இப்ராகிம் மலேசிய மக்களின் சார்பில் அனைத்து சீன நண்பர்களுக்கும் சீன வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சீனா மலேசியாவின் நட்பான அண்டை நாடாக விளங்குகிறது. அனைவரும் மலேசியாவில் பயணம் மேற்கொள்ள வரவேற்கிறேன் என்று அவர் கூறினார்.