ஈரான்-ரஷிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்:ஈரான் நாடாளுமன்றத் தலைவர்
2023-01-24 17:59:43

ஈரான் மற்றும் ரஷியா மீது அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளைச் சமாளிக்கும் விதமாக, ஈரானுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்டுத்த வேண்டும் என்று ஈரான் நாடாளுமன்ற தலைவர் கலிபாஃப் 23ஆம் நாள் தெரிவித்தார்.

ரஷிய நாடாளுமன்றத்தின் கீழ் அவைத் தலைவர் வோலோடின் 22,23ஆகிய இரு நாட்களிள் ஈரானில் பயணம் மேற்கொண்டார். வோலோடினுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்காவின் தடை நடவடிக்கை, ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு பொதுவான அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பல துறைகளில் இருதரப்புறவை ஆழமாக்க வேண்டும் என்று கலிபாவ் தெரிவித்தார்.

தனது உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், அமெரிக்கா மற்ற நாடுகள் மீது தடை விதித்து வருகின்றது என்று வோலோடின் தெரிவித்தார்.