சீன மின்சார வாகனத் துறை விரைவான வளர்ச்சி
2023-01-24 17:34:20

சீன வாகனத் தொழில் சங்கம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் சீனாவின் மின்சார வாகனத் துறை விரைவான வளர்ச்சி கண்டது. அதன் உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கைகள், முறையே 70இலட்சத்து 58ஆயிரமாகவும் 68இலட்சத்து 87ஆயிரமாக இருந்தன. இவை, 2021ஆம் ஆண்டை விட, 96.9விழுக்காடும் 93.4விழுக்காடும் அதிகமாகும். அதேவேளையில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக உலகில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.