கடும் குளிரால் ஆப்கானில் 104 பேர் உயிரிழப்பு
2023-01-24 16:36:47

கடந்த 2 வாரங்களாக நீடித்த கடும் குளிர் காரணமாக ஆப்கானிஸ்தானில் 104பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரி ஒருவர் 23ஆம் நாள் தெரிவித்தார்.

வானிலை மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் 30 டிகிரி செல்சியஸை எட்டியது குறிப்பிடத்தக்கது.