கோவிட்-19க்கு எதிரான சீனாவின் பணிக்கு 88.1 விழுக்காட்டு ஆதரவு
2023-01-26 17:11:51

உலகளாவிய கருத்துக் கணிப்பில் கடந்த 3 ஆண்டுகளில் கோவிட்-19க்கு எதிராக போராடுவதில் சீனா பெற்றுள்ள முன்னேற்றத்துக்கு 88.1 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சீனா டைனமிக்‌ முறையில் சரிப்படுத்துவதற்கு 71.6 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்.

சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் சிந்தனை கிடங்கு, சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து,  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட உலகின் 21 நாடுகளில் மேற்கொண்ட மக்கள் கருத்துக்கணிப்பில் இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் மற்றும் உயிரே முதன்மை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீனா, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை இடைவிடாமல் சரிப்படுத்தி, உலகின் மிக பெருமளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், உயிரிழப்பு விகிதம் மற்றும் கடும் நோய் பாதிப்பு விகிதம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சீனாவின் இவ்விரு விகிதங்கள், உலகின் சராசரி நிலையை விட குறைவு. கருத்துக்கணிப்பில் 88.1 விழுக்காட்டினர் சீனாவின் பணிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆசியா, ஆப்ப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 93.4விழுக்காட்டு ஆதரவு கிடைத்துள்ளது.