சீனா அர்ஜென்டீனாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி:வெளியுறவு அமைச்சர் காஃபியெரோ
2023-01-26 16:50:02

சீனா, அர்ஜென்டினாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக திகழ்கிறது. பொருளாதார வர்த்தகத் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு நீண்ட காலத்துக்கு வளர்ச்சி அடைவதை எதிர்பார்ப்பதாக அர்ஜென்டீனா வெளியுறவு அமைச்சர் சந்தியகோ காஃபியெரோ 24ஆம் நாள் தெரிவித்தார்.

சீன ஊடகக் குழுமத்திற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், அர்ஜென்டினா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவில் கலந்து கொண்டு, சீனா அர்ஜென்டினாவில் முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறது. இந்த முயற்சியின் மூலம்,  சீனா மற்றும் உலகிற்கு அர்ஜென்டீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் பல்வகைத்தன்மையும் போட்டித்திறனையும் மேம்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

அர்ஜென்டினா-சீனா உறவு, லத்தீன் அமெரிக்கா–சீனா உறவு தொடர்ச்சியாக ஆழமாக வளர வேண்டும் என்று காஃபியெரோ விருப்பம் தெரிவித்தார். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல்,பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு முறைமையில் இணைவதற்கான விண்ணப்பத்தையும் அர்ஜென்டினா சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.