உலக பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் சீன வசந்த விழா
2023-01-29 18:16:48

2023ஆம் ஆண்டு சீன வசந்த விழா காலத்தில் 30.8 கோடி மக்கள் உள்நாட்டு பயணம் மேற்கொண்டனர். உள்நாட்டு சுற்றுலா வருமானம், 37584.3 கோடி யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இவை முறையே 23.1 மற்றும் 30 விழுக்காடு அதிகம். இதனிடையே திரைப்படங்களின் வசூல் 675.8 கோடி யுவானை எட்டி, கடந்த வசந்த விழா காலத்தை விட 11.89 விழுக்காடு அதிகம். மேலும் தேசிய குடியேற்ற நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின் படி, இக்காலத்தில், சீனாவின் நுழைவு மற்றும் வெளியேற்ற சோதனை நிலையங்களைக் கடந்த மக்களின் எண்ணிக்கை, 120.5 விழுக்காடு அதிகரித்தது. இந்த சாதனைகள், இவ்வாண்டு சீன பொருளாதார வளர்ச்சிக்கு சீரான துவக்கத்தை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒப்பனை பொருட்கள், மதுபானங்கள், கடல் உணவு உள்ளிட்டவை சீனாவில் நல்ல விற்பனை ஆகின. இது பெரிய சீன சந்தையின் ஈர்ப்பாற்றலை வெளிக்காட்டி, சீனா மீதான அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சீன சந்தையின் வாய்ப்புகளும் வளர்ச்சிப் போக்கும் மாறவில்லை என்பதை வசந்த விழாவில் செழுமையான நுகர்வு சந்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

உலகப் பொருளாதாரத்திற்கு இது நல்ல செய்தியாகும். கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டில், சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு சீன பொருளாதார வளர்ச்சி மீதான மதிப்பீட்டை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.