நேட்டோ அமைப்பின் உண்மையான நோக்கம்
2023-02-01 15:48:53

ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ள நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கும் ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவும் ஜனவரி 31ஆம் நாளிரவு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில் கடல் பாதுகாப்பு, இணையதளம், ஆயுதக் கட்டுப்பாடு முதலிய துறைகள் சார்ந்து இரு தரப்பும் ஒத்துழைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர். அதோடு, சீனாவின் இராணுவ ஆற்றல், தைவான் பிரச்சினை ஆகியவை தொடர்பாக கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக ஜப்பான் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியில், கடந்த 6 ஆண்டுகளில் நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஒருவர் ஜப்பானில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும் என்றும்  நேட்டோவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தீவிரமாக நெருக்கமாகி வருகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்வைத்த இந்தோ-பசிபிக் நெடுநோக்கு வழிகாட்டுதலில் சீனாவைச் சாக்குப்போக்காகக் கொண்டு ஆசிய-பசிபிக் பிரதேச விவகாரத்தில் நேட்டோ தலையிடுவது குறித்து, ஆசிய-பசிபிக் பிரதேசம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நேட்டோ அமைப்பின் உண்மையான நோக்கத்தை ஆசிய-பசிபிக் மக்கள் தெரிவாக அறிந்து கொண்டு, உறுதியாகப் புறக்கணித்துள்ளனர். ஆனால், தென்கொரியாவையும் ஜப்பானையும் தனது மேலாதிக்கவாதத்தை நனவாக்குவதற்கான திறவுகோலாகும் என்று நேட்டோ கருதுகின்றது. ஆனால், ஆசிய நாடுகளான அவை நேட்டோவுடன் தவறானப் பாதையில் நடைபோட்டால், ஆடுகளுக்கு ஓநாய்கள் பாதுகாப்பு என்பது போலாகி விடும்.