நேட்டோவுடன் ஆபத்தான நிலையில் செயல்படும் ஜப்பான்
2023-02-02 20:15:35

ஜப்பானில் பயணம் மேற்கொண்ட நேட்டோவின் தலைமைச் செயலாளருடன் அந்நாட்டின் தலைமை அமைச்சர் கிஷிடா பூமியோ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதை ஜப்பான் கருத்திக் கொள்வதாகவும், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நேட்டோவின் பாதுகாப்பு ஒத்துழைப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானின் குறிப்பிட்ட சக்திகள் தங்கள் சுயநலனுக்காக வெளிப்புற சக்திகளுடன் தொடர்பு கொண்டு, மோதல் மற்றும் பகைமை ஏற்படும் அபாயத்தை ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் கொண்டு வர முயல்கின்றனர் என்பதை இது நிரூபித்துள்ளது.

அமெரிக்காவின் தூண்டுதலில், நேட்டோ ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தொடர்ந்து செயல்பட முயற்சி வருகிறது. இதற்காக அது தேர்ந்தெடுத்துள்ள முக்கிய கூட்டாளியாக ஜப்பான் திகழ்கிறது. இராணுவ வல்லரசாக மீண்டும் இருப்பதன் மீதான ஜப்பானின் பேராசையே, இருதரப்புகள் நெருங்கியதற்குக் காரணமாகும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோவை பின் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஜப்பான், உண்மையிலே சொந்த அரசியல் நோக்கங்களையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு கொள்கை மற்றும் சமாதான அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டுப்பாடை முறியடித்து, இராணுவ விரிவாக்கத்தை விரைவுப்படுத்தி, இயல்பான நாடாக மாறுவது அதன் நோக்கமாகும்.

ஆனால், 21ஆவது நூற்றாண்டு, ஜப்பான் ஆயுதங்களுடன் அயல் நாடுகளை ஆக்கிரமிக்கக் கூடிய காலம் அல்ல. ஜப்பானின் அரசியல்வாதிகள் வெளிப்புற சக்திகளை ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அழைத்துக் கொண்டு தலையீடு செய்தால், அவர்களை ஆழ்ந்த பள்ளத்தில் விழ நேரிடச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.