சாலமனுக்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும்
2023-02-04 17:15:21

பசிபிக் பிராந்தியத்துக்கு சோவியத் யூனியனின் பாதிப்பு மீதான கவலை காரணமாக, அமெரிக்கா, 1988ஆம் ஆண்டு சாலமன் தீவு கூட்டத்தில் தூதரகத்தை அமைத்தது. சோவியத் யூனியன் கலைந்த பின், இத்தூதரகம் 1993ஆம் ஆண்டில் மூடப்பட்டது. அதற்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் அமெரிக்காவின் புவியமைவு அரசியல் திட்டத்தில், தென்பசிபிக் பிராந்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை.

2022ம் ஆண்டு சீனா, சாலமனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கட்டுக்கோப்பு உடன்படிக்கையை உருவாக்கியது. அப்போது முதல், முன்பு புறக்கணிக்கப்பட்ட இப்பசிபிக் தீவு நாடு, அமெரிக்கப் பார்வையில் நுழைந்து, அதன் தூதரகத்தை மீண்டும் திறந்து வைத்தது. சாலமனின் வளர்ச்சியில் அமெரிக்கா உண்மையில் கவனம் செலுத்தியிருந்ததா?அமெரிக்கா, சாலமனை சம நிலையிலான ஒத்துழைப்புக் கூட்டாளியாக வைத்திருந்ததா முதலிய சந்தேகங்கள் அந்நாட்டு மக்களிடையில் எழுந்துள்ளது நியாயமானது.