அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் – சீனா
2023-02-05 17:17:08

சீனாவின் மக்கள் பயன்பாட்டுக்கான ஆளில்லா வான்கப்பலை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வான்கப்பல் குடிமக்கள் பயன்பாட்டுக்கானது என்றும் தவறுதலாக அது அமெரிக்க வான்பரப்புக்குச் சென்று விட்டது என்றும் அமெரிக்க தரப்பிடம் பல முறை தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை அமைதியான முறையில் அணுகுவதுடன் அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, பென்டகன் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் கடந்த வியாழன் அன்று கூறுகையில், சீன வான்கப்பல், ராணுவத்துக்கோ குடிமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருந்தார்.