தமிழகத்தில் நெரிசலில் 4 பெண்கள் சாவு
2023-02-05 17:18:02

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச புடவை வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர், காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 600 முதல் 700 பேர் வரை கூடியிருந்ததாகவும் இந்த நிகழ்வுக்கு முன்அனுமதி வாங்கவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.