உலகத் தயாரிப்பு துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு உயர்வு
2023-02-06 16:00:13

இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் உலக தயாரிப்புத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுக் கூட்டமைப்பு பிப்ரவரி 6ஆம் நாள் வெளியிட்டது. இதில், தொடர்ந்து 7 மாதங்களாக சரிவு ஏற்பட்ட நிலைமையில், ஜனவரி மாதக் குறியீடு, கடந்த டிசம்பர் மாதத்தை விட உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. சீனத் தயாரிப்புத் தொழிலின் விரைவான மீட்சியானது, உலகப் பொருளாதார மீட்சிக்கும் முக்கிய சக்தியாக பங்காற்றியது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதத்தில் உலகத் தயாரிப்புத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு 49.2சதவீதமாக இருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தை விட 0.6 சதவீதப் புள்ளிகளாக அதிகரித்தது. 2022ஆம் ஆண்டின் பிற்பாதியில் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து கீழே நோக்கி செல்லும் போக்கு குறிப்பிட்ட அளவில் குறைந்துள்ளது என்று இக்குறியீட்டின் உயர்வு பொருட்படுகிறது.