வெளிநாடுகளுக்கான குழுவான சுற்றுலா சேவை சீனாவில் மீண்டும் தொடக்கம்
2023-02-06 15:23:00

சீனத் தேசிய பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, சிங்கபூர் உள்ளிட்ட 20 நாடுகளில் சீனர்களின் பயணச் சேவையைச் சீனாவின் சுற்றுப்பயண நிறுவனங்கள் மற்றும் இணையச் சுற்றுலா நிறுவனங்கள் பிப்ரவரி 6ஆம் நாள் மீண்டும் தொடங்கியுள்ளன. 6ஆம் நாள் அதிகாலை, வெளிநாடுகளுக்கான சுற்றுலா குழுக்கள் சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டன.

சீனச் சுற்றுலா குழுமத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போதைய பயணச் சேவையில் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் சொகுசான சுற்றுலா பயணத்துக்கு, மேலும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அதனுடன், பண்பாட்டு அனுபவ நிகழ்ச்சிகள் பயணத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.