சீனாவில் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நீர் சேமிப்பு கட்டுமானம்
2023-02-06 10:02:39

வசந்தகாலம் தொடங்கியதும் சீனாவில் நீர் சேமிப்புக்கான பல முக்கிய திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று, ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்துள்ளன.

பிப்ரவரி 5ஆம் நாள் வரை, தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை எடுத்துச் செல்லும் திட்டப்பணியின் கிழக்கு மற்றும் மத்திய கோட்டின் முதல் கட்டத் திட்டத்தின் மூலம் வட பகுதிக்கு 6000 கோடி கன மீட்டர் நீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் ஆற்றின் ஓராண்டு நீரோட்ட அளவுக்கு இது சமமாகும்.

தானிய உற்பத்தி திறனை மீண்டும் ஒருமுறை உயர்த்தும் விதம், நவீன நீர் பாசன கட்டுமானம் தீவிரமாக விரைவுபடுத்தப்படுகிறது.

மேலும், இவ்வாண்டின் இறுதிக்குள் நாட்டின் கிராமப்புறங்களில் குழாய் நீர் பரவல் விகிதத்தை 88 விழுக்காடாக அதிகரிக்கும் வகையில், இப்பகுதிகளில் குடிநீர் நிலையை உயர்த்தும் பல திட்டப்பணிகளும் சுறுசுறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.