ரஷிய வெளியிறவு அமைச்சரின் ஈராக் பயணம்
2023-02-07 14:23:01

ஈராக் தலைவர்கள் பிப்ரவரி 6ஆம் நாள் அந்நாட்டு தலைநகர் பாக்தாதில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்தனர். பொருளாதாரம், பாதுகாப்பு முதலிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றும் என்று இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

ஈராக் அரசுத் தலைவர் மாளிகை அதே நாள் வெளியிட்ட அறிக்கையில், கூட்டு நலனை நனவாக்கும் வழிமுறையில் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான உறவை ஈராக் நாடுவதாக அரசுத் தலைவர் ராஷித் தெரிவித்தார்.

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பில் கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தவிர்ப்பது, அமைதிக்கு முன்னுரிமை வழங்குவது ஆகிய ஈராக்கின் நிலைப்பாட்டுக்கு ரஷியா பாராட்டு தெரிவிக்கின்றது. அதேவேளையில், இரு நாட்டுறவை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம், இராணுவம் முதலிய துறைகளில் ஈராகுடனான ஒத்துழைப்பை விரிவாக்க ரஷியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.