துருக்கிக்கும் சிரியாவுக்கும் சீன அரசு வழங்கும் உதவி
2023-02-07 16:19:29

துருக்கிக்கு 4 கோடி யுவான் மதிப்பிலான அவசர உதவிகளையும் அவசரமாக தேவைப்படும் நிவாரணப் பொருட்களையும் சீன அரசு வழங்கவுள்ளது என்று 7ஆம் நாள் சீனச் சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு நிறுவன அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் சிரியாவுக்கான மீட்புப் பொருட்களையும் சீனா ஏற்பாடு செய்து அனுப்பவுள்ளது. சீனாவின் முதலாவது அரசு சாரா மீட்புக்குழு 7ஆம் நாள் காலையில் சம்பவ இடத்துக்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.