இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு முதலீட்டாளர்களுக்கு மோடி வலியுறுத்தல்
2023-02-07 11:11:21

இந்தியாவின் எரிசக்தி துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு, உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக, திங்கள்கிழமை தலைமை அமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வைத் துவங்கி வைக்கும் போது மோடி இவ்வழைப்பை விடுத்தார்.

21ஆம் நூற்றாண்டு, உலகின் எதிர்கால திசையை அமைப்பதில் எரிசக்தி துறையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய மோடி, ஆற்றல் மாற்றத்திற்காகவும், புதிய ஆற்றல் வளங்களை வளர்ப்பதாகவும், உலகின் வலுவான குரல்களில் இந்தியாவும் ஒன்றாகும் என்று கூறினார்..

தற்போதைய தசாப்தத்தில், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மிக அதிகமாக இருக்கும் என்றும், இது எரிசக்தி துறையின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கின்றது என்றும் மோடி கூறினார்.