உலகிற்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் ஹாங்காங்
2023-02-07 10:24:55

கோவிட்-19 நோய் தொற்று தடுப்பு கொள்கையின் சீராக்கம் மற்றும் நோய் தொற்று நிலைமையின் மாற்றத்துடன், ஹாங்காங்கிற்கும் சீனப் பெருநிலப்பகுதிக்கும் இடையேயான இயல்பான பயணம் பிப்ரவரி 6ஆம் நாள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சி மீது ஹாங்காங் மக்களின் எதிர்பார்ப்பு இதில் அடங்குகிறது. இதனிடையே, எதிர்காலத்தில் சீனப் பெருநிலப்பகுதியை உலகின் இதர பிரதேசங்களுடன் இணைப்பதில் ஹாங்காங் மேலும் சிறப்பாகப் பங்காற்றும் என்று சர்வதேச அளவில் பொதுவாகக் கருதப்படுகிறது.

சர்வதேச நிதி, போக்குவரத்து மற்றும் வர்த்தக மையமாகத் திகழும் ஹாங்காங், சீனப் பெருநிலப்பகுதியை உலகத்துடன் இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. இது, உலகின் கவனத்தை ஹாங்காங் ஈர்த்து வருவதற்கான காரணமாகும். ஹாங்காங் பொருளாதாரம் சீராக இருந்தால், உலகிற்கும் மேலதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ள ஹாங்காங், முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. வருங்காலத்தில், குவாங்டோங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்தின் கட்டுமானத்தில் ஹாங்காங் மேலும் ஆக்கமுடன் பங்கெடுத்து, நாட்டின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் வழங்கப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தொடர்பு அலுவலராகச் செயல்படும். இதனால், வளர்ச்சிக்கான பெரும் இயக்காற்றலை ஹாங்காங் பெறும் அதேவேளை, உலகிற்கும் கூட்டு வெற்றிக்கான வாய்ப்புகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.