உக்ரைன் நெருக்கடியுடன் தொடர்புடைய தரப்புகளுக்கு சீனாவின் வேண்டுகோள்
2023-02-07 10:53:17

உக்ரைன் நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியை முன்னேற்றுவதற்குப் பங்காற்றவும், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தச் செய்து கூடிய விரைவில் போர் நிறுத்தத்தை நனவாக்குவதற்குப் பாடுபடவும் வேண்டும் என்று சீனா மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாக ஐ.நாவுக்கான சீன துணை நிரந்தர பிரதிநிதி தை பிங் 6ஆம் நாள் கூறினார்.

உக்ரைன் பிரச்சினை குறித்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் மனித நேயத்திற்கும் சீனா எப்போதுமே ஆதரவு அளிக்கின்றது. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உக்ரைன் நெருக்கடியை அமைதியாக சமாளிக்கும் முயற்சிக்கு ஆதரவு அளித்து, போரில் சிக்கியுள்ள பொது மக்கள் மீண்டும் அமைதியைப் பெறுவதற்கு உதவி அளிக்க சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.