துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மனித நேய உதவி
2023-02-07 09:30:19

சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள துருக்கியின் தென் பகுதியில் பிப்ரவரி 6ஆம் நாள் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு பிறகு, ஐ.நா அவசர மீட்புப் பணியை உடனடியாக மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மக்களுக்கு மனித நேய உதவியை வழங்கத் தொடங்கியது.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சர்வதேசச் சமூகம் உதவியளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், துருக்கி செம்பிறைச் சங்கம் மற்றும் சிரிய செம்பிறைச் சங்கத்துக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மனித நேய உதவித் தொகையைத் தனிதனியாக வழங்க சீன செஞ்சிலுவை சங்கம் திட்டமிட்டுள்ளது என்று இச்சங்கத்தில் கிடைத்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.