முழு சீன-அமெரிக்க உறவை போட்டி மூலம் வரையறுக்க வேண்டாம்:சீனா
2023-02-08 18:59:26

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், நாட்டின் நிலைமை பற்றிய செய்தியில் தெரிவிக்கப்பட்ட சீனா பற்றிய கருத்துக்கள் குறித்து 8ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், போட்டியைச் சீனா தவிர்க்கவோ அஞ்சவோ இல்லை. ஆனால் போட்டியின் மூலம் முழு சீன-அமெரிக்க உறவையும் வரையறுப்பதை எதிர்க்கிறோம் என்றார்.

சீன-அமெரிக்க உறவு என்பது நீங்கள் தோற்றீர்கள், நான் வென்றேன் என்பது அல்ல. நீங்கள் செழிப்படைந்தீர்கள், நான் வீழ்ச்சி அடைந்தேன் என்பதும் அல்ல. அது இழப்பு-லாபம் பெறும் ஒரு விளையாட்டு அல்ல என்பதைச் சீனா எப்போதும் கூறி வருகின்றது என்று மாவோ நிங் வலியுறுத்தினார்.