அதானி குழுமத்தில் எல்ஐசி-இன் பங்கு 1 விழுக்காடு – அரசு
2023-02-08 16:56:59

அதானி குழுமத்தில் அரசுசார் இந்தியக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு வெறும் 1 விழுக்காடு மட்டுமே என்று நிதித்துறையின் இணை அமைச்சர் பாகவத் காரத் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

2022, டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்பி, அதானி குழுமத்தில் எல்ஐசி கொண்ட பங்குகள் மற்றும் கடன் தொகை 434 கோடி டாலர் என்று எல்ஐசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு வெகுவாகச் சரிவடைந்தன.

அக்குழுமத்தில் பொது வங்கிகள் மற்றும் எல்ஐசி ஆகியவை பங்குகளைக் கொண்டிருந்த்தால் இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஹிண்டென்பர்க்கின் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.