சீனப் பாரம்பரிய காகித கத்தரிப்புக் கண்காட்சி
2023-02-08 10:37:39

சீனப் பாரம்பரிய காகித கத்தரிப்புக் கலை, யுனெஸ்கோவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் சேர்க்கப்பட்டது. சீனாவின் தேசிய கலை மற்றும் கைவினை அருங்காட்சியகத்தில் காகித கத்தரிப்புக் கலை பற்றிய சிறப்புமிக்க ஒரு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்ட 400 படைப்புகள், சீனாவின் வடப் பகுதிகள் குறிப்பாக சான்ஷி மாநிலத்திலுள்ள காகித கத்தரிப்புக் கலையின் தனிச்சிறப்புகளை வெளிப்படுத்துகின்றது.