உலகளாவிய பசுமை வளர்ச்சி அமைப்புடன் இலங்கை ஒப்பந்தம்
2023-02-08 16:56:04

காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றும் விதம் உலகளாவிய பசுமை வளர்ச்சி அமைப்புடன் இலங்கை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அரசுத் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முன்னாள் ஐநா பொதுச் செயலாளர் மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி அமைப்புக் கவுன்சிலின தலைவர் பான் கீ மூன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கையில் பசுமை வளர்ச்சி முன்னெடுப்புகளை இருதரப்பும் திறம்பட மேற்கொள்வதற்கு இவ்வொப்பந்தம் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பசுமை வளர்ச்சி அமைப்பில் 2019இல் இலங்கை உறுப்பினராகச் சேர்ந்தது. அதன் துணைத் தலைவராக கடந்த அக்டோபரில் இலங்கை தேர்வானது குறிப்பிடத்தக்கது.