ஈரான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேரும் சட்டத்தை அமலாக்க உத்தரவு பிறப்பிப்பு
2023-02-08 11:36:06

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான் உறுப்பு நாடாக சேர்வதற்கான சட்டத்தை அமலாக்க ஈரான் அரசுத் தலைவர் இப்ராஹிம் ரைசி 7ஆம் நாள் உத்தரவை பிறப்பித்தார்.

பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஈரான் அதிகாரப்பூர்வமாக சேர்ந்த பின்பு, தொடர்புடைய துறைகளில் ஈரானின் நலன்களை மேலும் பயனுள்ளதாகப் பேணிக்காக்க முடியும். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பில் ஈரான் கலந்து கொள்வதை முன்னேற்றுவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக இணைவதன் முக்கியத்துவங்களில் ஒன்றாகும் என்று ஈரான் அரசுத் தலைவர் இணையத்தளத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.