2022ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை உயர்வு
2023-02-08 10:52:39

அமெரிக்க வணிக அமைச்சகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சரக்கு மற்றும் சேவை வர்த்தக பற்றாக்குறை 2021ஆம் ஆண்டை விட 12.2 விழுக்காடு அதிகரித்து, 94 ஆயிரத்து 810 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியுள்ளது.

இத்தகவலின் படி, சரக்கு வர்த்தக பற்றாக்குறையின் பாதிப்பினால், 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை தொகை பெருமளவில் அதிகரித்தது. இதில் சரக்கு வர்த்தக பற்றாக்குறை 1.19 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2021ஆம் ஆண்டை விட 9.3 விழுக்காடு அதிகரித்தது. சேவை வர்த்தக பற்றாக்குறை 24 ஆயிரத்து 370 கோடி அமெரிக்க டாலரை எட்டி, 2021ஆம் ஆண்டை விட 0.6 விழுக்காடு குறைந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இறக்குமதி தொகை அதிகரிப்பினால் அதன் வர்த்தக பற்றாக்குறை முன்கண்டிராத நிலையை எட்டியது. வர்த்தகத்துக்கு உயர் பணவீக்கம் ஏற்படுத்திய பாதிப்பை இது வெளிக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.