வளர்ச்சியை உலக கொள்கைக் கட்டுகோப்பின் முக்கிய இடத்தில் வைக்க வேண்டும்:சீனா
2023-02-09 11:21:13

சர்வதேச சமூகம் உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, ஐ.நாவின் பங்களிப்பில் கவனம் செலுத்தி வளர்ச்சி என்பதை உலகின் கொள்கைக் கட்டுகோப்பின் முக்கிய இடத்தில் வைக்க வேண்டும் என்றும், வளர்ச்சி நிரல் குறித்த கவனத்தையும் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்றும்  ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்தரத் துணைப் பிரதிநிதி தையீங் 8 ஆம் நாள் தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில், வளர்ச்சிக்கு உதவியளிக்கும் வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி ஐ.நாவின் வளர்ச்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,  சீனா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உலக வளர்ச்சி முன்னெடுப்பின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்தி உலக வளர்ச்சிச் சமூகத்தைக் கூட்டாக கட்டிமைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.