சின்ஜியாங்கிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான விமானச் சேவை மீண்டும் துவக்கம்
2023-02-09 11:03:47

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான விமானச் சேவை 3 ஆண்டுகளுக்குப் பிற்கு பிப்ரவரி 8ஆம் நாள் மீண்டும் துவங்கியது. 2020ஆம் ஆண்டுக்குப் பின் சின்ஜியாங்கில் இருந்து தெற்காசியாவுக்கு மீண்டும் துவக்கப்பட்ட முதலாவது நிலையான நேரடி விமான வழித்தடம் இதுவாகும். மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட 160 பேர் 8ஆம் நாள் இவ்வழித்தடத்தைச் சேர்ந்த முதலாவது விமானத்தின் மூலம் பயணம் மேற்கொண்டனர்.

மேலும், சர்வதேச விமான வழித்தடங்களின் மீட்சியை சின்ஜியாங் விரைவுபடுத்தி வருகிறது.