திவால் நிலையிலிருந்து இலங்கை மீட்சி அடையும் – ரணில்
2023-02-09 16:56:46

இலங்கை 2026ஆம் ஆண்டுக்குள் திவால் நிலையிலிருந்து மீட்சி அடைந்து விடும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தெரிவித்தார்.

அரசின் எதிர்காலக் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில், பல்வேறு குழுவினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வரிச் சீர்திருத்தம் தொடர்பான ஒரு திட்டத்தைக் கொண்டு வர உள்ளேன் என்று தெரிவித்தார்.

தேச நலனுக்காக கசப்பான முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளேன் என்றும் அதன் முக்கியத்துவத்தை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் மக்கள் உணர்ந்து கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு அறைகூவல்களுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பலவீனமான குழுவினரைக் காப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.