வெளிநாடுகளுக்கான சீனாவின் விமான சேவை மீட்சி
2023-02-09 09:46:08

இந்த வாரம், வெளிநாடுகளுக்கான குழுவான சுற்றுலா சேவையைச் சீனாவின் சுற்றுலாப்பயண நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இணையச் சுற்றுலா நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு வசந்த விழா விடுமுறையில், வெளிநாடுகளுக்கான விமானச் சீட்டுகளின் முன்பதிவு தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.7 மடங்கு அதிகரித்துள்ளது. ஜனவரியின் பிற்பகுதி முதல் பிப்ரவரி துவக்கம் வரை, சீனாவிலிருந்து தென் கிழக்காசியாவுக்குச் சென்ற விமானத் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மேலும், வசந்த விழா விடுமுறைக்குப் பிறகு, கிழக்காசியாவுக்கான விமானச் சீட்டுகளின் விலை மேலும் குறைந்துள்ளது. இதுவரை, வெளிநாடுகளுக்கான பறத்தல் நெறிகளை பல விமான நிறுவங்கள் மீண்டும் துவங்கின அல்லது அதிகரித்துள்ளன.