வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையில் ஊன்றி நிற்கும் சீனா
2023-02-09 17:34:01

உயர்நிலையிலான வெளிநாட்டுத் திறப்பு அளவை, சீனா தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் அம்மையார் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இவ்வாண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி, உலகின் மொத்த அதிகரிப்பின் நான்கில் ஒரு பகுதி வகிக்கும் என்றும், இது, சீனாவுக்கும் உலகிற்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் குறிப்பிடப்பட்டது.

இது, சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று மௌ நிங் தெரிவித்தார்.