இந்தியாவில் ரெபோ விகிதம் 6.5 விழுக்காடாக உயர்வு
2023-02-09 16:58:11

இந்தியாவில் வணிக ரீதியிலான வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான, ரெபோ ரேட்டை மத்திய ரிசர்வ் வங்கி புதன்கிழைமை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரெபோ விகிதம் 6.5 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இதனிடையே, 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந் தாஸ் கூறுகையில், கடந்த சில மாதங்களில் இருந்து வந்த மோசமான உலகப் பொருளாதாரச் சூழல் தற்போது இல்லை என்றும் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீளும் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.