உலக உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் – சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்
2023-02-09 11:07:17

உலக உணவு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு நெருக்கடியை தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக உணவுத் திட்ட அலுவலகம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகள் 8ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், அந்த அறிக்கையில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தற்போதைய நிலைமையில் பெரும் கவனம் செலுத்தி பேரிழவு நிலைமையை மதிப்பிட்டு ஒவ்வொரு அமைப்பின் கடமைக்கிணங்க தேவையான ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் சர்வதேச அமைப்புகள் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.