அமெரிக்கா உலகத்துக்குப் பொறுப்பான பதிலை அளிக்க வேண்டும்:சீனா
2023-02-10 17:28:47

நோர்ட்ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய் அமெரிக்க உளவுத் தகவல்  அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களால் ரகசியமாக வெடித்து தகர்த்தப்பட்டது என்று அமெரிக்கச் செய்தியாளர் சீமொ ஹாஷ் கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் 10ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா உலகத்துக்குப் பொறுப்பான பதிலை அளிக்க வேண்டும் என்றார்.

நோர்ட்ஸ்ட்ரீம் இயற்கை எரிவாயு குழாய், நாடு கடந்த முக்கிய அடிப்படை வசதியாக உள்ளது. இது தொடர்பான குண்டுவெடிப்புச் சம்பவம், உலக எரிசக்தி சந்தை மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் சூழலுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.