ஷென்சோ-15 பயணக் குழு வீரர்களின் முதலாவது விண்வெளி நடைப் பயணம் வெற்றி
2023-02-10 11:30:50

சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பயணப் பணியகம் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் தியன்கொங் விண்வெளி நிலையத்தில், ஷென்சோ-15 பயணக் குழு வீரர்களான ஃபெய் ஜுன்லோங், டேங் சிங்மிங், சாங் லு ஆகியோர் ஒத்துழைப்புடன், 7 மணிநேர விண்வெளி நடைப் பயணத்துக்குப் பிறகு, பிப்ரவரி 10ஆம் நாள் 0:16 மணியளவில் திட்டமிட்ட அனைத்து கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றினர். விண்வெளி நடைப் பயணத்தை மேற்கொண்ட ஃபெய் ஜுன்லோங் மற்றும் சாங் லு கடமைக்குப் பிறகு வென்தியன் ஆய்வகத் தொகுதிக்குள் பாதுகாப்பாகத் திரும்பினர்.

சீன விண்வெளி நிலையம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு விண்வெளி வீரர்கள் வெளியே நடைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. திட்டப்படி, இந்த பயணக் குழு பலமுறை விண்வெளி நடைப் பயணம் மேற்கொள்ள உள்ளது.