சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பு
2023-02-10 16:57:34

சீன வணிக அமைச்சகத்தின் ஒத்துழைப்புப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் 9ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ம் ஆண்டில் சாதகமற்ற வெளிப்புறப் பாதிப்புகளைச் சமாளித்த  சீனா, வெளிநாடுகளில் நேரடி முதலீடு செய்த தொகை 98 ஆயிரத்து 537 கோடி யுவானை எட்டி, 2021ஐ விட 5.2 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக, வெளிநாட்டு மொத்த மற்றும் சில்லறை வணிகத் துறைக்கான முதலீடு, வேகமாக அதிகரித்துள்ளன.

2022ம் ஆண்டில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் நிதி சாராத துறைகளில், சீனத் தொழில் நிறுவனங்களின் நேரடி முதலீட்டு அளவு, 2097 கோடி டாலரைத் தாண்டியது. இந்த முதலீடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டுக் கட்டுமானத்துக்கு ஆக்கமுள்ள பங்கு ஆற்றியுள்ளது.