நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கும் சிரியாவுக்கும் உதவி அளித்த சீனா
2023-02-10 10:43:02

சிரியாவின்  எல்லைக்கு அருகிலுள்ள துருக்கியின் தென்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் நடந்ததை அடுத்து, சீனச் செஞ்சிலுவை சங்கம், சிரியாவுக்கு வழங்கிய முதல் தொகுதி உதவி பொருட்கள் 9ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் தமாஸ்கஸ்ஸினைச் சென்றடைந்தது.

இந்த உதவிக்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்த சிரியாவின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துறைத் துணை அமைச்சர் முயாதாஸ் கூறுகையில், கடினமான காலத்தில் நட்புறவை கொண்ட நண்பர்களாகச் சீனாவும் சிரியாவும் திகழ்வதாகத் தெரிவித்தார். மேலும், வெகுவிரைவில் இந்த உதவிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

தவிரவும் சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷு யுடிங் அம்மையார் 9ஆம் நாள் கூறுகையில், துருக்கிக்கும் சிரியாவுக்கும் உதவி பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாட்டுப் பணியை சீன வணிக அமைச்சகம் ஏற்பாட்டை விரைவுப்படுத்துகின்றது என்றார். அதோடு, துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள சீன வணிக சங்கங்களும் தொழில் நிறுவனங்களும் சமூக பொறுப்புகளை ஏற்று, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி பொருட்களையும் சாதனங்களையும் நன்கொடையாகக் கொடுப்பதற்குச் சீன அரசு ஆரதவு மற்றும் ஊக்கமளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.