உலகளவில் அதிகரிக்கும் மின்சாரத் தேவை
2023-02-10 12:37:10

சர்வதேச எரியாற்றல் நிறுவனம் பிப்ரவரி 8ஆம் நாள் வெளியிட்ட 2023ஆம் ஆண்டு மின்சாரச் சந்தை பற்றிய அறிக்கையில், எரியாற்றல் நெருக்கடி மற்றும் சில பகுதிகளில் காணப்பட்ட இயல்பற்ற காலநிலையின் காரணமாக, 2022ஆம் ஆண்டு உலகளவில் மின்சார தேவையின் அதிகரிப்பு விகிதம் 2 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எரியாற்றல் விலை உயர்வு காரணமாக, 2022ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மின்சாரத் தேவை 2021ஆம் ஆண்டை விட 3.5 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், பொருளாதாரத்தின் பெரும் மீட்சி மற்றும் கோடைகாலத்தில் உயர் வெப்பம் காரணமாக, இந்தியாவில் மின்சாரப் பயன்பாட்டு அளவு 8.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மின்சாரத் தேவை 2.6 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை, உலகளவில், மின்சாரத் தேவை ஆண்டுக்கு 3 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.