சீனச் சர்வதேச மருத்துவ அணிக்கு ஷி ச்சின்பிங்கின் ஊக்கக் கடிதம்
2023-02-10 16:50:12

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் மத்திய ஆப்பிரிக்காவுக்கு உதவி அளித்து வரும் சீனாவின் 19ஆவது தொகுதி மருத்துவ அணி உறுப்பினர்களுக்கு 9ஆம் நாள் பதில் கடிதம் அனுப்பி, அவர்களுக்கும் வெளிநாடுகளில் மருத்துவப் பணி செய்து வரும்  மருத்துவ அணிகளின் உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்து தன் எதிர்பார்ப்பைப் பகிர்ந்து கொண்டார்.

தன்னுடைய கடிதத்தில், அமைதியை நேசிக்கும் சீன மக்கள் உயிரைப் பேணி மதித்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். பரோபகார மனத்துடன் அங்குள்ள மக்களுக்கு நன்மை புரிந்து, மனிதகுல பொது சுகாதார சமூகத்தின் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் பங்காற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு சீனா செய்யும் உதவிப் பணிகளுள் மருத்துவ உதவி முக்கிய பகுதியாகும். கடந்த 60 ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 76 நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் சீனா 3000க்கும் மேலான மருத்துவ பணியாளர்களை அனுப்பியுள்ளது. 29 கோடி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ள அவர்கள் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.