கம்போடிய தலைமை அமைச்சர் ஹன் சென்னின் சிறப்பு நேர்காணல்
2023-02-11 19:36:46

சீன – கம்போடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை இரு நாடுகளின் வர்த்தகத் தொகை 1000கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்பார்க்கப்பட்ட இலக்கு 2 ஆண்டுகளுக்கு முன்கூடியே நிறைவேற்றப்பட்டுள்ளதாக கம்போடிய தலைமை அமைச்சர்  ஹன் சென் சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில்  தெரிவித்தார்.

மேலும், நடப்பு சீனப் பயணம் பற்றிய தனது எதிர்பார்ப்பு குறித்து அவர் கூறுகையில், அரசியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதை எதிர்பார்ப்பதாகவும், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவோம் எனவும் தெரிவித்தார். மேலும், கோவிட்-19 தொற்று நோய் காலத்தில், சீனாவும் கம்போடியாவும் ஒன்றுக்கொன்று உதவி வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், குறிப்பாக தொற்று தடுப்பில் சீனா கம்போடியாவுக்கு அதிக உதவி அளித்துள்ளதை நினைவுபடுத்தினார். மேலும், சீன–கம்போடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதாக இந்தப் பயணம் அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பு ஆகியவை குறித்து தலைமை அமைச்சர்  ஹன் சென் கூறுகையில், தற்போது, உலகில் ஆழ்ந்த மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.  பிரிவினை நிறைந்திருக்கிற உலகில் ஒழுங்குமுறை கடுமையாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது. எனினும், உலகம் ஒரு கிராமம் போலவே இணக்கமாக வாழ்ந்து வருகின்றது. அச்சுறுத்தல் இல்லாமல், ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி உண்டு என்று நினைக்கிறேன். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, எங்களின்  மிக பெரிய இலக்கு. ராணுவ மோதல் அல்ல. எனவே, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெடுப்பை மனமார பாராட்டுகிறேன். இந்த முன்னொழிவுகள் பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இணக்கமான சகவாழ்வு, பொதுவான செழிப்பு மற்றும் அருமையான எதிர்காலம் கொண்ட சமூகமாக உலகம் மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.