ஜனவரியில் சீனாவின் சிபிஐ மற்றும் பிபிஐ
2023-02-11 17:43:15

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சீன நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 2.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது,கடந்த டிசம்பரில் இருந்ததை விட, 0.8விழுக்காடு அதிகமாகும்.

மேலும்,  சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றத்தாழ்வு, உள்நாட்டில் காணப்படும் நிலக்கரி விலையின் சரிவு உள்ளிட்ட காரணங்களால், ஜனவரி மாதத்தில் சீனாவின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் ஜனவரியை விட, 0.8விழுக்காடு குறைந்துள்ளதாகச் சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.