நேபாள சுற்றுலா தொழில் வல்லுநர்களுக்கான சீன மொழி பயிற்சி வகுப்பு மீண்டும் துவக்கம்
2023-02-11 17:20:14

நேபாளத்தின் சுற்றுலா தொழில் வல்லுநர்களுக்கான 5ஆவது சீன மொழிப் பயிற்சி வகுப்பு 10ஆம் நாள் அந்நாட்டுத் தலைநகர் காத்மாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டது. முன்பு, கரோனா பரவல் பாதிப்புக் காரணமாக, இந்த சீன மொழி வகுப்பு 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வகுப்பின் துவக்க விழாவில் நேபாளத்துக்கான சீனத் தூதர் சென்சுங் பங்கேற்று உரை நிகழ்த்துகையில், கரோனா பரவலுக்கு முன்பு, நேபாளத்தில் அதிகம் பயணம் மேற்கொள்ளும் 2ஆவது பயணிகள் நாடாகச் சீனா விளங்கியதையும், நேபாளத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாகச் சீனா திகழ்ந்ததையும் சுட்டிக் காட்டினார். மேலும், எதிர்காலத்தில் நேபாளத்துடன் இணைந்து, அமைதி மற்றும் நட்புறவை வளர்ப்பதில் சுற்றுலா துறையின் பங்களிப்பை மேலும் விரிவாக்க சீனா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.