நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ள அமெரிக்கா
2023-02-11 16:26:56

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச் சவம்பம் பற்றி புதிய தகவல் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் சிய்மோர் ஹெர்ஷ் வெளியிட்ட தகவலின் படி, ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு அனுப்பும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களை சேதப்படுத்திய வெடிப்புச் சம்பவத்தை பைடன் அரசு திட்டமிட்டு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பத்திரிக்கைத் துறையில் திறன்வாய்ந்தவரும் புகழ்பெற்றவருமான  சிய்மோர் ஹெர்ஷ்  வெளியிட்டுள்ள குழாய் வெடிப்புத் தொடர்பான தகவல்கள் ஆதாரமற்றவைகளாக இருப்பதற்கான  சாத்தியம் குறைவு என்று ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

ஆனால், சிய்மோர் ஹர்ஷின் குற்றச்சாட்டை அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக்குழு, மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, வெளியுறவு அமைச்சகம் ஆகிய துறைகள் மறுத்துள்ளதோடு, அவர் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளன. அதேவேளையில், சிய்மோர் ஹெர்ஷ் வெளியிட்ட தகவல் பற்றி மேற்கத்திய நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் இது வரை கிட்டத்தட்ட முற்றிலும் எவ்விதக் கருத்தையும் கூறவில்லை.

ஜெர்மனியின் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியானது, 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷிய – உக்ரைன் மோதல் ஏற்பட்டதற்கு முந்தைய சில வாரங்களில்,  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தால், தி நோர்ட் ஸ்ட்ரீம் 2 எனும் எரிவாயு குழாய் இருக்காது. அதனை முடிவுக்குக் கொண்டு வருவோம் எனப் பைடன் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள், ஐரோப்பாவில் இருந்து மாபெரும் லாபம் ஈட்டியுள்ளன. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் சேதப்படுத்தப்பட்டது, அமெரிக்காவுடன் தொடர்பு உடையது என்று அமெரிக்காவின் ஃபோக்ஸ் நியூஸ் சேனலைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய், முக்கிய பன்னாட்டு அடிப்படை வசதியாகும். அதன் சீர்குலைவு, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும்  உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.  விதிமுறையை அடிப்படையாக கொண்டுள்ள சர்வதேச ஒழுங்கு பற்றி மீண்டும் மீண்டும் பேசி வரும் அமெரிக்கா, நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்புச்சம்பவம் பற்றிய உண்மையை உலகம் தெரிந்து கொள்ளும் வகையில், சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ள ஐயங்களுக்குப் பொறுப்பான பதில் வழங்க வேண்டும்.